BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு

கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு

 கோவை பேரூர் அடுத்த சுண்டபாளையம் அரசு உயர் நிலை பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பாலியல் குறி்த்த விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்கள்..

கோவை பேரூர் அடுத்த சுண்ட பாளையம் அரசு, உயர் நிலை பள்ளியில், பயலும் மாணவ மாணவிகளுக்கு, இன்று, வடவள்ளி காவல்நிலையத்தின் சார்பாக, பாலியல், குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, வடவள்ளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடவள்ளி காவல்நிலைய, முதல் நிலை காவலர், டி, பிரேமா மற்றும், எல், சரிதா, ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்...




அதில், 1 முதல் 5-ம் வகுப்புவரை உள்ள குழந்தைகள் தெரியாத நபர்களிடம் எந்த பொருட்களையும் வாங்கக்கூடாது வாங்கி சாப்பிடக்கூடாது. குழந்தைளுக்கு நன்கு பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் பெற்றோருக்கு தெரியாமல் ஏதாவது கொடுத்தால் வாங்கக்கூடாது, என்றும், உங்களுடைய உடலை யாரும் தொடவோ, பார்க்கவோ அனுமதிக்ககூடாது.. உங்களுடைய உடல்களை, உங்களது அம்மா உங்களை குளிக்க வைக்கும்போதும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போதோ, தொடுவது பார்ப்பது தவறில்லை, இது நல்ல எர்ணத்தில் தொடப்படும்' 'இது நல்ல தொடல்  ஆகும். ஆனால் வேறு யாரும் இது போல் செய்தால் அது தவறான தொடுதல் ஆகும்.





அவ்வாறு யாராவது செய்தால் அடையாளம் காட்டும் தைரியம் உங்களுக்கு  வர வேண்டும், சம்மந்தப்பட்டவர்களை தெரியாத நபர்கள் அல்லது  பெற்றோரை    தவிர மற்றவர்கள் உங்களை தொடவந்தால்  நீங்கள் அவர்களிடம் “என் அம்மா இது மாதிரி நீங்கள் என்னை தொடுவதை அனுமதிக்க கூடாது  பற்றி எனக்கு சொல்லிகொடுத்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் என்னை தவறான தொடுதலை தொடகூடாது, என்று சொல்லிவிடுங்கள் எனவும்,உங்களை கொஞ்சுவது  போல் பாவித்து மடியில் அமர வைத்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு பேசுவதை அனுமதிக்க கூடாது, அப்படி நடந்தால் பெற்றோர்களிடம்  தகவல் தெரிவிக்க வேண்டும். அதை பெற்றோரிடம் சொன்னால் உன்  பெற்றோர் இருந்துவிடுவார்கள் என சொல்லி பயமுறுத்துவார்கள் அதை நம்பக்கூடாது.





குழந்தைகளை தவறான நோக்கத்தோடு தொட்டால் தடுக்கவும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவும் மேலும் கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்.

குழந்தைகள் வெளியில் செல்லும் போது தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் விளையாட செல்லும்போது எங்கு செல்லுகிறோம் என்பதை பெற்றோரிடம் சொல்லிட்டு தான் செல்ல வேண்டும் எக்காரணம் கொண்டும் பொய் சொல்ல கூடாது விளையாடும் போதோ வெளியில் இருக்கும் போதோ தினமும் நடப்பதை பெற்றோரிடம் மறைக்காமல் அப்படியே சொல்ல வேண்டும்

விளையாட்டின் போது உங்களது வயது ஏற்ப நண்பர்களுடன் விளையாடுவது நல்லது, உங்கள் வீட்டிற்குள் குடியிருக்கும் தாத்தா மாமா அண்ணன் ஆகியோர்கள் உங்களை அழைத்தால் உடனடியாக உங்களுடைய பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும், அங்கு சென்றால் அவர்கள் உங்களை எதற்காக கூப்பிட்டார்கள் என்று கேள்வி கேட்க வேண்டும். கடைக்கு போகச்சொன்னால் மறவாமல் உங்கள் பெற்றோரிடம் சென்று சொல்லி விட்டு தான் செல்ல வேண்டும் பள்ளிக்கு செல்லும்போது ஆட்டோ டிரைவர் வேன் டிரைவர அல்லது வழியில் யாராவது உங்களை தொடுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது மீறி தொட்டால் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர் இந்த நிகழ்ச்சியில் சுண்டபாளையம், அரசு உயர் நிலை  பள்ளி, தலைமை ஆசிரியர் ஹேமலதா, மற்றும் அறிவியல் ஆசிரியர் கருப்பசாமி, மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

###########

கோவை நிருபர்: கோபிநாத் 

Post a Comment

0 Comments