BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திரதின விழா மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திரதின விழா மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் நடைபெற்றது. 


75 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையிலும், பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் முதல்வர் ரமீஜா அலீமா முன்னிலையிலும் நடைபெற்றது. 




இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் வழக்கறிஞர் அனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவரும், முன்னாள் வக்ப் வாரிய தலைவருமான ஹைதர் அலி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, முஸ்லிம்களின் தியாகமும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 


இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் சாதிக், மாவட்ட செயலாளர் சேக் மைதீன், மாவட்ட பொருளாளர் சாகின், மாவட்ட துணைத் தலைவர் ரபீக், உசேன் மற்றும் சதக்கத்துல்லா, மாநில பொதுச் செயலாளர் அப்பாஸ் மற்றும் பக்ருதீன் உட்பட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர். மேலும் சிலம்ப மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களுக்கும், வழக்கறிஞர் அனந்தகுமார் அவர்களுக்கும் அவர்கள் சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments