NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** நடைபயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது

நடைபயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது

 திருச்சி பாலக்கரையில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது.



தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தலைமைச் செயலகம் நோக்கி நடை பயணம் பாலக்கரையில் துவங்கி நடைபெற்றது.




75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் முஸ்லிம்களும் தமிழின உணர்வாளர்களும் சிறையில் வாடுகின்றனர், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் தலைமையில் இந்த நடைபயணம் துவங்கியது.

அதன் பின்னர் திருச்சி பாலக்கரையில் இருந்து நடை பயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் சிறிது தூரத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments