NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக மமக திருச்சி மேற்கு மாவட்டம் சார்பாக தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கல்வி உதவிகள், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் திருச்சி மாநகரில் 08 வது வார்டு உறையூர், 28 வது வார்டு தென்னூர், 29 வது வார்டு ஆழ்வார்தோப்பு, 52 வது வார்டு பீமநகர் 62வது வார்டு இமராசந்திரா நகர், இனாம்குளத்தூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமை தாங்கினார்.


மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA அவர்கள்  தேசிய கொடிகளை ஏற்றி வைத்து கல்வி உதவிகள், மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள்

சமூக நீதி மாணவர் பேரவை மாநில செயலாளர் வழ. நூர்தீன், மாவட்ட நிர்வாகிகள் இப்ராஹிம், ஹூமாயூன் கபீர், இப்ராம்ஷா, இம்ரான், அசாருதீன்,  மணவை அக்பர், குளத்தூர் ஹூமாயூன், அப்துல் ரசாக், தென்னூர் சதாம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்



இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது‌.

Post a Comment

0 Comments