NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** சமயபுரம் கோவிலில் காசுக்கு தான் மவுசு...! பக்தர்கள் வேதனை

சமயபுரம் கோவிலில் காசுக்கு தான் மவுசு...! பக்தர்கள் வேதனை

தமிழகத்தில்  இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருக்கோவில்களில் திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. 




இந்த  திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மரியாதை குறைவாகவும், அடாவடித்தனமாக அலட்சியத்துடனும் நடந்து கொள்வதாகவும் , மேலும் பணம் மிக்கவர்களிடம் மட்டுமே கவனிப்புடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  



இக்கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு ரூபாய் 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் பொது மக்களிடம் மட்டும் நுழைவாயிலில் செல்ல 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 






கோவிலில் பின்வாசலில் இதற்காகவே யூனிஃபார்ம் அணிந்து கொண்டு (செக்யூரிட்டிகள்) காவலாளிகள் காரில் வரும் செல்வ சீமான்களை குறி வைத்து பின் வாசல் வழியாக அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதை தெரிந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இணை ஆணையர் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக  சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பி உள்ளனர்...

நிருபர் சாய் கோபால் 

Post a Comment

0 Comments