// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** குஜராத் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

குஜராத் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால்  2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் இனப்படுகொலை கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பல்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனவும் குற்றவாளிகளை மீண்டும் சிறையிலடைக்க வலியுறுத்தியும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


மண்டல தலைவர் அப்துல் கபூர் மன்பஈ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி, இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அர்சத் அஹமது அல்தாபி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 





மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments