BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனைவிதை விதைப்பு

திருச்சியில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனைவிதை விதைப்பு

 திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனை விதை விதைப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் , தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா,கன்மலை டிரஸ்ட்,வில்பர்ட் எடிசன்,அக்னி சிறகுகள் மகேந்திரன், சுகு, நிரோஷ், ஆரிப் உட்பட பல தன்னார்வலர்கள் பனை விதை விதைப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

 

பனை விதை விதைப்பு நிகழ்வு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பெ. விஜயகுமார் பேசுகையில்,


தமிழர்களின்  மரம் என கொண்டாடப்படும் பனை மரத்தை பாதுகாக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனை விதை விதைப்பு பணியினை உய்யங்கொண்டான் குழுமாயி அம்மன் திருக்கோவிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆற்றங் கரையோரத்தில் விதைத்துள்ளோம்


 "பனை மரத்துக்கும் தமிழர்களுக்குமான தொடர்பானது ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது. பண்டைய இலங்கியங்கள் யாவும் பனை ஓலையில் எழுதப்பட்டவைதான். காகிதங்கள் கண்டுபிடிக்கும் முன்பு வரை பனை ஓலைகளில் எழுதப்பட்ட இலங்கியங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நகர்த்தப்பட்டன


பனைமரத்தில் ஆண் பனை,  பெண் பனை, கூந்தப் பனை, தாளிப் பனை, குழுதிப் பனை, சாற்றுப் பனை, ஈச்சம் பனை,  ஈழப் பனை, சீமைப் பனை, ஆதம் பனை, திப்பிலிப் பனை, இடுக்குப் பனை என 34 வகைகள் உள்ளன. தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏறத்தாழ 8 கோடி பனைமரங்கள் இருந்தன.


முறையான பராமரிப்பு இல்லாததாலும், செங்கல் சூளையில் பயன்படுத்தவும், விறகு, வீட்டு உபயோகத்திற்காகவும்  பனைமரங்களை வெட்டி விட்டனர்.  இது தவிர பனைமரங்களை பராமரிக்க தேவையான ஊழியர்கள் கிடைக்காததாலும் பல மரங்கள்  பட்டுபோக தொடங்கிவிட்டன. 

ஒரு காலத்தில்  பனைமரங்கள் அதிகமாக இருந்தன. தற்போது  பனையை பாதுகாக்க வேண்டியும் பனை தொழில் மேம்பட பலதிட்டங்களை கொண்டு வர வேண்டும். நீர்பிடிப்பு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க   பனை மரவிதைகளை விதைத்து வருகிறோம்.


இன்றைய இளைய தலைமுறையினர் பனையின் பயன்கள் மற்றும் பனை பொருள்களில் உள்ள சத்துக்கள் குறித்தும்,  மருத்துவகுணம் பற்றியும் அறியாமல் உள்ளனர். அவர்களிடம் பனை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

ஒரு பனை மரம் ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு,  8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை தருகிறது. ஒரு பனை மரத்தில் இருந்து 24 கிலோ பனைவெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவை கிடைக்கின்றன.

இயற்கை நமக்குத் தந்த பெரும் கொடைகளில் ஒன்று பனைமரம். தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும் அந்த மரம் மனிதர்களுக்கு சலிப்பின்றி பலன் தரக்கூடியது.  எனவே, நாம் அனைவரும் பனை மரம் வளர்க்கும் பணியில் முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள்வோம்.

வருங்காலங்களில்

  தன்னார்வலர்களை கொண்டு  பனை விதைகளை சேகரிப்பதும்  பனைவிதைகளை விதைப்பதும் என திட்டமிட்டுள்ளோம்என்றார்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர் பனை விதை விதைப்பிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments