NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SDPI கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் சுதந்திர கொண்டாட்டம்

SDPI கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் சுதந்திர கொண்டாட்டம்

 இந்திய திருநாட்டை வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற 75 ஆவது ஆண்டை முன்னிட்டு SDPI கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,  ஸ்ரீரங்கம் தொகுதி, பெட்டவாய்த்தலை  கிளையின் சார்பாக கிளை தலைவர் யாசர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜித் அவர்கள் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வில் ஷிரங்கம் தொகுதி தலைவர் மர்சுத் அவர்களும், கிளை துணைத்தலைவர் மகாலிங்கம், செயலாளர்கள் இஸ்மாயில், சாகுல் ஹமீது, பொருளாலர் பாரூக் மற்றும் செயல்வீரர்கள் முன்னிலை வகித்தனர்.


இறுதியாக  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நல திட்ட உதவிகளும் செய்தனர்.

Post a Comment

0 Comments