// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி அரபி கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருச்சி அரபி கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் கொடியேற்று விழா மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது..முதல்வர் முப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்கள்!..


இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி மற்றும் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.


ஜாமிஆ அன்வாருல் உலூம்  அரபிக் கல்லூரியின் முதல்வரும், ஜமாத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவருமான மௌலானா.முப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள்.

இதில் மதரஸா மாணவர்களின் மிடுக்கான அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


இந்த நிகழ்வில் அரபுக் கல்லூரி பேராசிரியர்கள், ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள், உலமாக்கள்,சமுதாய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments