// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம் !

பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க சென்ற எஸ்.டி.பி.ஜ நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து திருச்சியில் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.




காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதார விளைநிலங்களையும் பறித்து விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்கச் சென்ற SDPI கட்சி மாநில செயலாளர் கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் அன்சாரி உட்பட நிர்வாகிகள் மீதான காவல்துறை அராஜக கைதை கண்டித்து திருச்சி பாலக்கரையில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.








ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக்கனி பொதுச்செயலாளர் சமீம் அன்சாரி மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர்வை ஜமால் முகமது, வடக்கு மாவட்ட தலைவர் நியாமத்துல்லா உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

Post a Comment

0 Comments