திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இன்று G K மூப்பனார் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு திருச்சி பாலக்கரை பகுதி சகாய மாதா மக்கள் மன்றம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த மாவட்ட துணை தலைவர் என் ரங்கராஜ் Ex.M.C . திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகர் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் S. ராஜு,
தாராநல்லூர் வடிவேலு , தாராநல்லூர் சோமு ஆசாரி, எடத்தெரு முருகேசன் , இளைஞர் அணி மாவட்ட பொது செயலாளர்கள் மாலிக், கமல் , திருவெறும்பூர் நகர தலைவர் சக்திவேல், தெற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ராம் சுந்தர், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பாலக்கரை கோட்டத் தலைவர் R.கண்ணன் நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலக்கரை கோட்டை துணை தலைவர் D J ஹரி, அரவை ஆலை அதிபர் சுந்தரம் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.
0 Comments