// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 22 வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 22 வது பட்டமளிப்பு விழா

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22 ஆவது பட்டாமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது..


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் செல்வம் அவர்கள் கலந்துகொண்டு பட்டம் வழங்கி உரை நிகழ்த்தினார்..



இதில் 1250 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் இந்த நிகழ்வில் இரண்டு மாணவர்களுக்கு தங்க பதக்கமும் 27 மாணவர்களுக்கு பல்கலைகழக தேர்வு தரவரிசை பட்டியலில் இடம் பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன


இந்த நிகழ்வில் கல்லூரியில் செயலர் மற்றும் தாளாளர் அமுங்கி பாலாஜி அவர்கள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம குழு தலைவர் ஸ்ரீ ராஜகோபால் அவர்கள் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிச்சைமணி துணை முதல்வர்கள் புல முதன்மையார்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments