// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டில் கொடியேற்று விழா

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டில் கொடியேற்று விழா

 எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் 18 வது வார்டு ஜின்னா திடலில் கொடியேற்று விழா வார்டு ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா அவர்களின் தலைமையில் நேற்று  நடைபெற்றது.கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா மற்றும் திருவெறும்பூர் தொகுதி செயலாளர் கைருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


எஸ்டிபிஐ கட்சியின் கொடியை திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அவர்கள் ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.


இக்கொடியேற்று நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மண்டல தலைவர் இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி.,அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வினை கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர்(பாபு) அவர்கள் தொகுத்து வழங்கி நன்றியுரை ஆற்றினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி அணி,கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Post a Comment

0 Comments