// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி இரட்டைவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதல்நாள் போட்டியாக  கூடைப்பந்தாட்டப் போட்டியும், கேரம் விளையாட்டுப் போட்டியும்  இன்று காலை இனிதே துவங்கியது. 


கூடைப்பந்தாட்டப் போட்டியில் 17 அணிகளும்,கேரம் விளையாட்டுப் போட்டியில் 180 மாணவர்களும் கலந்து கொண்டனர்.  



மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தீபன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்   . டாக்டர். குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவ,மாணவர்களுக்குப் பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.



 பள்ளி முதல்வர் திருமதி. உஷா ராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கி கெளரவித்தாா்.உடற்கல்வி ஆசிரியர் திரு. முருகபூபதி அவர்கள் நன்றியுரை வழங்கினாா்.


விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாக நாளை சதுரங்கப்போட்டி பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது.


கண்டோன்மென்ட் ஆர்.சி பள்ளியில் ZONAL-B குறுவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கு கேரம் போட்டி நடைபெற்றது..இதில் மாணவர்கள் 50 பேரும் மாணவிகள் 30 பேரும் கலந்து கொண்டனர்...

இப்போட்டியை  உடல் கல்வி ஆசிரியர் ஜான் சபரிராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார்..


நிருபர் JS மகேஷ்

Post a Comment

0 Comments