// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** "நாளும் ஒரு நற்சிந்தனை" நூல் வெளியீட்டு விழா

"நாளும் ஒரு நற்சிந்தனை" நூல் வெளியீட்டு விழா

சென்னை எழும்பூர் காந்தி இரவின் ரோட்டில் உள்ள  ரமடா ஹோட்டலில் மாண்புமிகு நீதியரசர் எம் கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல் வெளியீட்டு விழாவும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.... 


நூலை நீதியரசர் டி ராஜா அவர்கள் வெளியிட மாண்புமிகு நீதியரசர் எஸ் விமலா பெற்றுக்கொண்டார்...



இவ்விழாவில்  நீதியரசர் கே வெங்கட்ராமன், நீதியரசர் ஏடி ஜெகதீஷ் சந்திரா, நீதியரசர் சுந்தர் மோகன்,  நீதியரசர் பாஸ்கரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்...


நீதியரசர்  கற்பக விநாயகம் அவர்கள் தனிமனித ஒழுக்கம் நீதி நேர்மையுடன் வாழ வேண்டும் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்..


இந்த விழாவில் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக நிறுவனர்  ஜெயராமன் தலைமை தாங்கினார்..

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மணிவண்ணன் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக தமிழ் மாநில தலைவர் சின்ராஜ் தமிழ் மாநில செயலாளர் எஸ் கருப்பண்ணன் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரராஜா தமிழ் மாநில அமைப்பாளர் ஏ ராஜன் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக பொதுக்குழு ஆர்.கே ராஜா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments