BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** அமிர்தா வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

அமிர்தா வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

 திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் , மூன்றாம் நாளான இன்று யோகா சாம்பியன்ஷிப் போட்டி இனிதே துவங்கியது. 


27 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 380 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகள் தலா 10 பேருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.மொத்தம் 5 பிரிவுகளுக்கு 50 சான்றிதழ்களும்,பதக்கங்களும்,சுழற்கோப்பையும் பரிசளிக்கப்பட்டன.


மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்சிறப்பு விருந்தினராக வாசன்வேலி நலச்சங்கச் செயலாளர் 

சிவகுமாா் அவர்களும், பள்ளிமுதல்வர் திருமதி. உஷா ராகவன் அவர்களும் , அமிர்த வித்யாலயம் பள்ளியின்

(தமிழ்நாடு& புதுச்சேரி) உடற்கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் அவர்களும் ,  கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும்,

சான்றிதழ்களையும் ,சுழற்கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினர்.

பள்ளி முதல்வர் திருமதி.உஷா ராகவன்  அவர்கள் வரவேற்புரையும் , உடற்கல்வி ஆசிரியர் திரு. முருகபூபதி அவர்கள் நன்றியுரையும் வழங்கினர்.தேசிய கீதத்துடன்   நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments