// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

 திருச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

புதிய உறுப்பினர் சேர்க்கை, தேவர் ஜெயந்தி விழா குறித்து ஆலோசனை.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஜங்ஷனில் உள்ள அருண் ஓட்டலில் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.


மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கதிரவன் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை,

தேவர் ஜெயந்தி விழா, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை அக்டோபர் 30ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலச் செயலாளர் திண்டுக்கல் ஜெயராமன், காசிமாயன் , முருகையா, மாலைதுரை, சார்லஸ் சாமி, காஜாமலை கிரி, பூர்ண குமார், கருப்பையா மணி மற்றும் மாவட்ட ,நகர, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments