BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** பண்டித கோபாலகிருஷ்ணய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவு

பண்டித கோபாலகிருஷ்ணய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவு

திருச்சி  தேசியக்கல்லூரி  தமிழ்த்துறையின் முதல் துறைத்தலைவர் பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் தம் வரவேற்புரையில் நவீனத் தமிழ் முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்க ஆளுமையாக ம.கோ. திகழ்வதைக் குறிப்பிட்டார்.கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் தம் தலைமையுரை ஆற்றினார்..


இதுபோன்ற அறக்கட்டளைப் பொழிவுகளால் மாணவர்கள் தங்கள் திறன்களையும் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்...

இந்நிகழ்ச்சிக்குச் சென்னையிலிருந்து வந்திருந்த ம.கோ, அவர்களின் பேத்தி 

முனைவர் உஷா மகாதேவனும், மும்பையிலிருந்து வருகைபுரிந்த ம.கோ. பேரன் சுந்தரராஜனும் வாழ்த்துரை வழங்கினார்கள். 

அப்பொழுது ம.கோ,களஞ்சியத்தைத் தொகுத்தளித்த அனுபவத்தையும், சாகித்ய அகாதெமிக்கு ம.கோ.பற்றிய ஆளுமை அறிமுக நூல் எழுதிய தம் அனுபவத்தையும் உஷா மகாதேவன்

பகிர்ந்துகொண்டார். தமிழுலகில் தம் தாத்தா பதித்துச்சென்ற

தடங்களை

சுந்தரராஜன் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வில் சென்னை விவேகானந்தா கல்லூரியின் மேனாள் முதல்வர்

பேராசிரியர் முனைவர் வ.வே.சு. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு.

பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யரின் தமிழ்த்தொண்டு என்னும்

தலைப்பில் உரையாற்றினார். அவர்தம் உரையில், ம.கோ. ஒரு நல்லாசிரியராக

மட்டுமின்றிச் தலைசிறந்த தமிழ் ஆராய்ச்சியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும்

நல்ல கவிஞராகவும் விளங்கியதைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார். ம.கோ.

அவர்களின் இதழியல் பணி குறிப்பிடத்தக்கது என்றார். இன்றைய

இளந்தலைமுறைப் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக

ம.கோ. திகழ்வதையும் சுட்டிக்காட்டினார். மகாகவி பாரதியாரின் வாழ்வில் ம.கோ.அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதையும் விளக்கினார்.


முனைவர் வ.வே.சுப்ரமணியம் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். இடமிருந்து உதவிப் பேராசிரியர் சா. நீலகண்டன், தமிழ்த் துறை தலைவர் முனைவர்சா, ஈஸ்வரன்-  முனைவர் உஷா மகாதேவன்,  திரு சுந்தரராஜன் முனைவர் மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்


இந்நிகழ்வில் தமிழ்த்துறையின் துணைத்தலைவர் முனைவர் ந. மாணிக்கம்

மற்றும் துறைப் பேராசிரியர்கள், பிறதுறைப் பேராசிரியர்கள், ம.கோ. குடும்பத்தினர்

மற்றும் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் அனைத்து

ஏற்பாடுகளையும் செய்த அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முனைவர்

நீலகண்டன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.


நிருபர் - ரூபன் 

Post a Comment

0 Comments