// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பொன்மலை SRMU ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொன்மலை SRMU ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 

7லட்சம் ரயில்வே தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் சுமார் 10 சதவீதம் குறைத்து 3வருடத்தில் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும், மேலும் 

50வயது அல்லது 

30வருட பணி நிறைவு என்ற அடிப்படையிலும் தொழிலாளிகளையும் அதிகாரிகளையும் பணியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும்,  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும், ரயில்வே கட்டண உயர்வை கைவிட்டு,  பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Post a Comment

0 Comments