BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் உத்தம நபி உதய தின விழா

திருச்சியில் உத்தம நபி உதய தின விழா

திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமி ஆ யாஸீன் அரபுக்கல்லூரி மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, ஆகியோர் சார்பில் உத்தம நபிஉதய தின விழா  பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சன் டிவி புகழ் வீரபாண்டியன், மவ்லவி எம். ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி ஆகியோர் பங்கேற்பு 


திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமி ஆ யாஸீன் அறபுக்கல்லூரி மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, இ.எம்.எஸ். மீடியா ஆகியோர் சார்பில் உத்தம நபிஉதய தின விழா மற்றும் முப்பெரும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சன் டிவி புகழ் மூத்த ஊடகவியலாளர் வீரபாண்டியன்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் தலைவரும், சென்னை கைருல் பரிய்யா மகளிர் அறபுக்கல்லூரி முதல்வருமான முனைவர் 

மவ்லவி எம். ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி ஆகியோர் பங்கேற்றார்கள்.


திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி அருகே உள்ள மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமி ஆ யாஸீன் அறபுக்கல்லூரி மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, இ.எம்.எஸ். மீடியா ஆகியோர் சார்பில் உத்தம நபி அவர்களின் உதய தின விழா, கௌதுல் அஃளம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் நினைவு தினப் பெருவிழா மற்றும் இணையவழி மீலாது வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவராகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அறபுக்ல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முதல் அமர்வாக காலை 7 மணிக்கு புனித ஸுபுஹான மவ்லிது ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது. 


பின்னர் மாபெரும் மீலாதுன்னபீ முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மற்றும் மீலாது விழா கமிட்டி தலைவர் கலீபா முனைவர் ஏ.பி. சகாப்தீன் ஹக்கிய்யுல் காத்ரிய் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை மவ்லவி ஹாபிழ் வி.எம். முஹம்மது ஸக்கரிய்யா கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். வந்த அனைவரையும் அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை பொருளாளர் மதுக்கூர் பொறியாளர் ஹைதர் முஸ்தபா ஹக்கிய்யுல் காத்ரிய் வரவேற்று பேசினார்



விழாவிற்கு ஸ்ய்யிது திருமுல்லைவாசல் எம். யாஸீன் மௌலானா ஹக்கிய்யுல் காத்ரிய், மதுக்கூர் கலீபா வழக்கறிஞர் ஏ.என்.எம். லியாகத் அலி ஹக்கிய்யுல் காத்ரிய், திருச்சி எம். சிராஜுதீன் ஹக்கிய்யுல் காத்ரிய், சென்னை வழக்கறிஞர் கலீபா ஏ. அப்துல் ரவூப் 

ஹக்கிய்யுல் காத்ரிய், ஈரோடு கலீபா ஹாஜி பொறியாளர் ஸதக்கத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காத்ரிய், கூத்தாநல்லூர் கலீபா பொறியாளர் வி.எஸ். நிஜாமுத்தீன் ஹக்கிய்யுல் காத்ரிய், சென்னை கல்பாக்கம் பொறியாளர் கலீபா எம். சக்கரை முஹம்மது  ஹக்கிய்யுல் காத்ரிய், சென்னை டாக்டர் எஸ்.ஏ. அஷ்ரப் ஹக்கிய்யுல் காத்ரிய், திருச்சி அய்மான் மகளிர் கலைக்கல்லூரி தலைவரும், கீழக்கரை டவுன் காஜி முனைவர் ஏ.எம்.எம். காதர் பாக்ஸ் ஹுசைன் மக்தூமி, கோவை வேளாண்மை கல்லூரி பேராசிரியர் முனைவர் எம். முஹம்மது யாஸீன் ஹக்கிய்யுல் காத்ரிய், அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை செயலாளர் தௌலத் ஹக்கிய்யுல் காத்ரிய் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்




தஞ்சாவூர் மாவட்ட அரசு டவுன் காஜி மவ்லவி அல்ஹாஜ் டி. சையது காதர் ஹுசைன், இந்திய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவரும், மறைஞானப் பேழை இதழ் ஆசிரியருமான கலீபா ஆலிம் புலவர் எஸ். ஹுசைன் முஹம்மது மன்பயீ ஹக்கிய்யுல் காத்ரிய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி ஹாபிழ் அல்ஹாஜ்  எஸ்.எம்.பி‌ ஹுசைன் மக்கீ மஹ்ழரி வலிகள் கோமான் போற்றும் நபிகள் கோமான் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்களை விரிவாக எடுத்து பேசினார்.


சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் தலைவரும், சென்னை கைருல் பரிய்யா மகளிர் அறபுக்கல்லூரி முதல்வருமான முனைவர் மவ்லவி எம். ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி நாவிருக்கும் காலமெல்லாம் நாயகத்தைப் போற்றுவோம் என்ற தலைப்பிலும், சன் டிவி புகழ் மூத்த ஊடகவியலாளர் வீரபாண்டியன் மனிதர்குல மாணிக்கம் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் கலந்து கொண்டு முரீதுகளுக்கான மீலாது இணையவழி வினாடிவினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.


இறுதியில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை பொதுச் செயலாளர் எஸ். யாஸீன் ஹக்கிய்யுல் காதிரிய் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை அவ்வனிய்யா உலக அறக்கட்டளை நிர்வாகிகள்,

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமி ஆ யாஸீன் அறபுக்கலலூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் மாஸீனிய் மௌலவிகள் பேரவை,  இ.எம்.எஸ். மீடியா மற்றும் மீலாது விழாக் குழுவினர்கள் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

Post a Comment

0 Comments