// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக ஜெயந்தி விழா

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக ஜெயந்தி விழா

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக தெய்வத் திருமகன் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது தேவர் ஜெயந்தி விழா திருச்சி அருண் ஓட்டலில் இன்று காலை முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது . 

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மாமன்னர் புலி தேவன் விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக கழக முதன்மை செயலாளருமான கே என் நேரு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 



 விழாவில் முன்னதாக ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜான் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். முன்னாள் பொது சுகாதார குழு தலைவர் தமிழரசி குத்துவிளக்கேற்றி வைத்தார். விழாவில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments