BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் மாநில தலைவர் தோழர் ஆ‌.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் சீனிவாசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில தலைவர் தோழர் மு. அன்பரசு தலைமை உரையாற்றினார்.  பொதுச் செயலாளர் ஆ.செல்வம் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றினார்.  மாநில பொருளாளர் தோழர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். விவாதத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு பங்கேற்றார்கள்.  மாநில செயலாளர் தோழர் ஆ.அம்சராஜ் நன்றி கூறினார். செயற்குழுவில் மாநில மாநில துணைத் தலைவர்கள் மொ.ஞானதம்பி, ஆ.பெரியசாமி, கோ.பழனியம்மாள்சி.எஸ்.கிறிஸ்டோபர், சி.பரமேஸ்வரி, மு.செல்வராணி, மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன், தெ.வாசுகி, மாநில செயலாளர்கள்  சா.டெனியல்ஜெயசிங், உ.சுமதி, ச.ஹெமலாதா, ரா.கோதாண்டபாணி, அ.குபேரன், திருச்சி மாவட்ட தலைவர் முனைவர் கா ‌ பால் பாண்டி, மாவட்ட பொருளாளர் தோழர் சுந்தர்ராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சகாதேவன், ஜீவானந்தம் சிவசங்கர், மாவட்ட இணை செயலாளர்கள் தோழர் அல்போன்ஸ், பாபு,  மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி மற்றும் அனைத்து மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள், வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 


செயற்குழுவில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

08/11/2022ல் மாவட்ட தலைநகரில் தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை - 152 ரத்து செய்திட , தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும்,DA, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், ஒப்பந்தம்,புற ஆதார முகமை (Out source) முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்


CPS ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்,

சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், MRB செவிலியர்கள் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரபடுத்தி காலமுறை ஊதியம் வழங்குவது



சாலைப்பணியாளர்களின் 41மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுவது

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற _08/11/2022_  அன்று மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில்  தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments