BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தேசிய கல்லூரியில் வணிகவியல் இலக்கிய மன்றம் துவக்க விழா

தேசிய கல்லூரியில் வணிகவியல் இலக்கிய மன்றம் துவக்க விழா

திருச்சி தேசியக்கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் இலக்கிய மன்றத்தின் துவக்க விழா கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. முனைவர் ஆர். சுந்தரராமன் தலைமை உரையாற்றினார். முன்னதாக முதலாம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவி ஜெ. லக்ஷ்மி ஜெயா வரவேற்றார். முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் ஜி. ஹரிராம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். திருச்சி, உருமு தனலட்சுமி கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர்  முனைவர் ஜெ. ஆல்பர்ட் வின்சென்ட் பால்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "ஒரு வெற்றி யாளராக இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் பேசினார். 




அவர் பேசுகையில் நல்லதை நினைக்க வேண்டும் என்றும், நல்லவனாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். தமிழின் மேல் பற்று வேண்டும் என்றும், தினமும் ஒரு ஆங்கில  வார்த்தையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் கூறினார். இளங்கலை பட்டம் படிக்கும் பொமுதே போட்டித் தேர்வுகளுக்கு தயார்   செய்து கொண்டால், படிப்பு முடிந்தவுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்று வேலைக்குச் செல்ல முடியும் என்றார். நேரத்தை வீணாக்காமல் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.  நம்மேல் நம்பிகை வந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார்.  இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி கே.அக்ஷயா நன்றி கூறினார்.  முதலாம் ஆண்டு பயிலும்  மாணவி ஆர். மஞ்சு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை பேராசிரியை முனைவர் பி. ஸ்ரீதேவி செய்தார். வணிகத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments