// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ரயில்வே தனியார் மயமாக்குதலை கண்டித்து SRMU தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

ரயில்வே தனியார் மயமாக்குதலை கண்டித்து SRMU தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

ரயில்வே தனியார் மயத்தை முறியடிக்கிற வகையில் இந்திய ரயில்வே பாதுகாப்பு வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் SRMU துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பணிமனை முன்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ரயில்வே தனியார்மய முடிவை உடனே நிறுத்த வேண்டும், புதிய டென்ஷன் திட்டத்தை மாற்றி 2004க்கு முந்தைய தரிசன திட்டத்தை வழங்கிட வேண்டும். 


ரயில்வே நிலையங்களை விரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது.  லட்சக்கணக்கான காலிடங்களை நிரப்பாமல் பயணிகள் பாதுகாப்பை அலட்சியப் படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.


மேலும் SRMU பொதுச் செயலாளர் கண்ணையா வழிகாட்டுதலின் படி இந்தியாவில் எந்த ரயிலும் ஓடாத அளவில் அகில இந்திய அளவில் பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments