// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** SDPI கட்சி மண்டல மாவட்ட தலைவர்கள் கலந்துரையாடல்

SDPI கட்சி மண்டல மாவட்ட தலைவர்கள் கலந்துரையாடல்

 SDPI கட்சியின் நெல்லை,தஞ்சை,திருச்சி,மதுரை ஆகிய மண்டலங்களின் மாவட்ட தலைவர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் இன்று கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி,மக்கள் நல பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.


நிகழ்வில் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக்,நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிக்கார் அலி,தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம், திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான்,மதுரை மண்டல செயலாளர் முஜீப் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments