BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டத்துடன் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் திருச்சிராப்பள்ளி அமைப்புடன் இணைந்து 55 வது தேசிய நூலக வார விழாவில் இந்திய தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது நூலகர் புகழேந்தி வரவேற்றார்.

வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் திருச்சிராப்பள்ளி தலைவர் தனபால், செயலாளர் தீபிகா வீரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.


நாணயங்கள், பணத்தாள்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் இந்திய தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் நாணயம் குறித்து பேசுகையில்,

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே கடந்த 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முதலாக ஏற்றினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து 

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே கடந்த 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முதலாக ஏற்றினார்.

இந்திய மண்ணில் முதன்முறையாக மூவர்ணத்தை ஏற்றிய இந்த மாபெரும் போராட்டத்துக்கும், சிவப்பு எழுத்து தினத்துக்கும் சாட்சியாக இருப்பது அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும்.  ரூ. 75 மற்றும் செல்லுலார் சிறையின் கருப்பொருள்கள் மற்றும் நேதாஜியின் முதல் மூவர்ணக் கொடியுடன், நினைவு நாணயம், நேதாஜி தீவுகளை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதேசமாக அறிவித்த வரலாற்றின் பொன்னான தருணத்தின் மிகச்சிறந்த உணர்வை பழக்கத்தில் விடப்படாத இந்த  நாணயம் வெளிப்படுத்துகிறது. நினைவு நாணயம், செல்லுலார் சிறைச்சாலையின் பின்னணியில், தாய்நாட்டின் அன்பைத் தங்கள் இதயங்களில் சுமந்துகொண்டு, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனுபவித்த பெரும் துன்பங்களையும் கற்பனை செய்ய முடியாத கொடுமைகளையும் நமக்கு நினைவூட்டுகிறது. நேதாஜியின் மூவர்ண வணக்கத்துடன் கூடிய முன்புறம் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையின் விடியலையும், நம் மக்கள் தைரியமாக ஏற்றுக்கொண்ட எண்ணற்ற துயரங்களுக்கு முடிவு கட்டுவதையும் குறிக்கிறது.  டிசம்பர் 30, 2018 அன்று

இந்திய தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் நாணயம்

 வெளியிடப்பட்டது.இந்த 75 ரூபாய் நாணயமானது, 35 கிராம் எடையில் 50% வெள்ளி, 40% செம்பு மற்றும் 10% நிக்கல் மற்றும் ஜிங்க் ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். நாணயங்கள் பணத்தாள்கள் சேகரிக்க கூடிய ஆர்வலர்கள் லட்சுமி நாராயணன், முகமது சுபேர், குணசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments