BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் மீது பெண் புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் மீது பெண் புகார்

திருச்சி கே கே நகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி இவர் வீடுகளில் படுக்கையில் கிடக்கும் நோயாளிகளை கவனிக்கும் செவிலியர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் நடத்தி வருவதாக ஆரோக்கியசாமி என்பவர் செல்விக்கு அறிமுகமாகி அரசு அதிகாரிகள் பலரை நன்கு தெரியும் எனவும் இதன் மூலம் செல்விக்கு சத்துணவுத் துறையில் சத்துணவு பணியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு லட்சம் பெற்றார். மேலும் இதே போல் செல்வியின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் கிளர்க் மற்றும் தலையாரி வேலை வாங்கித் தருவதாக 6-பேரிடம் ரூபாய் லட்சம் பெற்றுக் கொண்டார். இரண்டு வருட காலம் ஆகியும் வேலை வாங்கித் தராததால் செல்வியை அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பணத்தைக் திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். இதுகுறித்து ஆரோக்கியாமிடம் செல்வி சென்று கேட்டதற்கு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார் ஒரு கட்டத்தில் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி கமிஷனருக்கு புகாரை அனுப்பி வைத்தார் இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரை மூன்று நாட்களாக செல்வி விசாரணைக்காக காவல் நிலையம் வந்து சென்று கொண்டிருக்கிறார் பணத்தை ஏமாற்றியவர் தற்போது வரை விசாரணைக்கு வந்து ஆஜராகவில்லை என தெரிய வருகிறது.


இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேட்டி அளித்த செல்வி கூறுகையில்:-


அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிய ஆரோக்கியசாமி என்பவரிடம் 7 லட்சம்பணம் கொடுத்து ஏமாந்துள்ளோம். பணம் கிடைக்கவில்லை என்றால் தமிழக முதல்வர் வீட்டின் முன்பு சென்று தற்கொலை செய்து கொள்வேன் என கண்ணீர் மல்க கூறினார்.

Post a Comment

0 Comments