// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் அங்கன்வாடியை மாற்ற கோரி SDPI கட்சி மனு

பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் அங்கன்வாடியை மாற்ற கோரி SDPI கட்சி மனு

 திருச்சி மாநகராட்சி 29 ஆவது வார்டு பஸ் நிலையத்தில்  6 மாதம் காலமாக தற்காலிகமாக இயங்கி வரும் அங்கன்வாடியின் அவல நிலை, மழை பெய்தால் மழை நீர் வழிந்து ஓடுகிறது,100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் இந்த  அங்கன்வாடி மிகுந்த மோசமான நிலையில் உள்ளது.


குழந்தைகள் தினத்தின் பரிசாக மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆவணம் செய்து புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்பிபிஐ கட்சி ஆழ்வார் தோப்பு கிளையின் சார்பாக கிளை ஒருங்கிணைப்பாளர் Dr.s.பக்ருதீன் அவர்களின் தலைமையில் இன்று 29 வது வார்டு கவுன்சிலர் கமால் முஸ்தபா அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கிளை துணைத் தலைவர் காதர், மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான், தொண்டரணி மாவட்ட செயலாளர் ஆரிஃப், ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

.

Post a Comment

0 Comments