// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1,64,91,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் மேம்பாட்டு திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்... 


இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 50,000 பணை விதைகள் நடும் விழாவினையும்  அமைச்சர் கே என்.நேரு தொடங்கி வைத்தார்...


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Post a Comment

0 Comments