// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிலம்ப மாணவர்கள் வாழ்த்து

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிலம்ப மாணவர்கள் வாழ்த்து

திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சிலம்ப மாணவ மாணவிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜெ.செந்தில் அவர்கள் கூறுகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் மற்றும் இளைஞர் ஒருவர் விளையாட்டு துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கபட்டது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனவும் கூறினார்கள்.


சிலம்ப மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தி புதிய விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் சிலம்பத்திற்கு அரசு வேலை வாய்பில் முன்னுரிமை கொடுத்த அரசின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது எனவும் மேலும் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப ஆசான்களை விளையாடு ஆசிரியர்களாக நியமித்தால் நமது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்லும் என நம்பிக்கையை தெரிவித்தார்கள்.




உடன் உலக சிலம்ப இளையோர் சம்மேளன துணை தலைவர் மாணிக்கம், மோகன் தமிழ்நாடு சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாஸ்டர்கள் கிருஷ்ணன், சஞ்சீவி ரஞ்சன், கோகுல், பிரசாத் மற்றும் ஏராளமான சிலம்ப மாணவ மாணவிகள் பெற்றோரகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments