BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** டிசம்பர் - 6 பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு போராட்டம் எஸ்டிபிஐ கட்சி அழைப்பு

டிசம்பர் - 6 பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு போராட்டம் எஸ்டிபிஐ கட்சி அழைப்பு

 SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக டிசம்பர் 6 பாபர் பள்ளி தகர்ப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து SDPI கட்சியின் தெற்கு மாவட்ட  தலைவர் முபாரக் அலி  வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...


பாசிசம்  மதவெறி என்பது அனைத்து சமுதாய  மக்களுக்கும்  எதிரான  சித்தாந்தத்தைக் கொண்டது  வர்ண அடிப்படையில் வேதம் கற்பிக்கும்  செயல்முறை திட்டத்தை  நாட்டு மக்களிடையே  அடக்கு முறையின் மூலம் புகுத்த பார்க்கிறது  நாட்டின்  ஒருமைப்பாடு  மதசார்பற்ற  தன்மைக்கு   கேடு விளைவிக்கும் செயலை  செய்து  கொண்டிருக்கிறது 

அதனுடைய ஒரு பகுதியாகத்தான்  இஸ்லாமியர்களுக்கு சொந்தமான   பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதன் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் பாசிச எதிர்ப்பு தினத்தை SDPI கட்சி அனுசரித்து வருகின்றது..


நாளை காலை சரியாக பத்து மணி அளவில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது..

பாபர்  மஸ்ஜித்  இழைக்கப்பட்ட அநீதிக்கு  நீதி வேண்டி நடக்கும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு   மதச்சார்பற்ற அரசியல்  கட்சிகளும்  சமூக இயக்கங்களும்  மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவ்வொருவரும்  எஸ்டிபிஐ கட்சி நடத்தும் போராட்டத்திற்கு  ஆதரவாக குரல் எழுப்ப முன் வர வேண்டும்   பாசிசம் இல்லாத தேசம் உருவாக்க  அணி திரண்டு ஆதரவு தர வேண்டுமென  கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்...

Post a Comment

0 Comments