BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் - யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் - யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

 சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும்  யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைக்கப்பட்ட சர்சார் கமிட்டி, தனது பரிந்துரையில் சிறுபான்மையினர் உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 


மேலும் பள்ளி கல்வியை பாதியில் நிறுத்தும் (இடை நிற்றல்) எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களான கிருஸ்துவர்கள், பார்சி, ஜெய்னர்கள், சீக்கியர்களை விட முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, பள்ளி கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிறுத்ததை தடுக்கவும் உருவாக்கப்பட்டது தான் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டமாகும். இதில் முஸ்லிம்கள். கிருஸ்துவர்கள். பார்சிஸிக்கள், ஜெய்னர்கள், சீக்கியர்கள் என அனைத்து சிறுபான்மையினர் பயன்பெறுகின்றனர். தற்போது அது 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது

சிறுபான்மை மாணவர்கள் மத்தியில் இச்செயல் பெரும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. கல்வி உதவித்தொகை வழங்குவது என்பது ஒரு அரசு செலவாக கருதாமல் எதிர்கால நல் வாழ்விற்கான முதலீடாக கருத வேண்டும். எனவே ஒன்றிய அரசு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டுமென யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாநில தலைவர் பீமநகர் ரபீக் கேட்டு கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments