BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் பைக்கர்ஸ் நிறுவனம் இணைந்து மலேசியாவில் ரத்ததான முகாம்

புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் பைக்கர்ஸ் நிறுவனம் இணைந்து மலேசியாவில் ரத்ததான முகாம்

டிஜிட்டல் கல்வி சார் சிறப்பு நிலைத்தன்மை மேம்பாடு மற்றும் உலக அமைதிக்கான புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் (SMTU) திரு‌.பைக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மலேசியாவின் 10 குகை முனீஸ்வரன் கோவில் பகுதியில் இரத்ததானம் நடைபெற்றது... 


இந்த நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர் 105 பேர் ரத்ததான பதிவு செய்ததில்  84 பேர் தகுதி பெற்று ரத்த தானம் செய்தனர்... இது குறித்து  புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் நிறுவனர் மற்றும் துணைவேந்தர் டாக்டர். ஆர்.விஜய சரஸ்வதி மேலும் பேசுகையில்..... 



வெவ்வேறு ரத்த தானத்தின் மூலம் நாம் மூன்று உயிர்களை காப்பாற்றலாம் சமூக நலன் கருதி பலர் முன்வந்து ரத்தம் தானம் செய்தனர்.. 




மலேசியா அரசாங்கம் ரத்தம் தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கிறது.. மலேசியா நேரப்படி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை ரத்த தானம் தொடர்ந்து நடைபெற்றது





புனித அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் துணைவேந்தர் டாக்டர் ஆர்.விஜய சரஸ்வதி அவர்கள் ரத்ததானம் செய்ததோடு மட்டுமல்லாமல் இந்த புனிதமான நிகழ்ச்சியில் முன்மாதிரியாக திகழ்ந்தார்.. மேலும் மலேசியா ஜனாதிபதி டத்தோ பாலமுருகன் நாயர் மற்றும் துணைத் தலைவர் கெவின் நாயர் ஆகியோர் சேர்ந்து ரத்ததான முகாமை நடத்தினார்கள். 





திரு.பைக்கஸ் தலைவர்.திரு.அப்பாஸ் கோவில் கோவில் அதிகாரி கந்தசாமி மற்றும் குழுவினர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் SMTU மற்றும் பைக்கர்ஸ் எக்ஸ்கோ உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.ஆயிரம் மைல்கள் பயணம் ஒரு அடியில் தொடங்குகிறது என்ற பழமொழிக்கு ஏற்ப ரத்ததானமே உயிரை காப்பாற்ற முதல் படி ..ஆறு மாதங்களுக்கு ஒரு ரத்ததானம் செய்வதன் மூலம் விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்ற முடியும்.. "சிறு பெரு வெள்ளம்" என்பது போல நம்முடைய இந்த சிறிய முயற்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம் என புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் நிறுவனர் மற்றும் துணை வேந்தர் ஆர்.விஜய சரஸ்வதி கூறினார்..

Post a Comment

0 Comments