BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதியருக்கு பாராட்டு

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி தம்பதியருக்கு பாராட்டு

திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் சார்பில் சமூகப் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா, தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

 ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கம் மற்றும் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர் மோகன்ராம் தலைமையில். தேசிய மக்கள் உரிமை இயக்க தேசிய தலைவர் சிங்க தமிழச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் சரவணன், தென்னக நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் மோகன், வழக்கறிஞர் திலிப் குமார், மாற்றம் அமைப்பு நிறுவனர் தாமஸ்,தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவர் சிவசங்கரன், லட்சியம் வெல்லும் இதழ் ஆசிரியர் சதாசிவம், ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்க செயலர் மிலிட்டரி நடராஜன் முன்னிலையில் திருச்சியில் அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும்  தம்பதியர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் செயலினை பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

 இது குறித்து சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,

 பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், ஏதோ ஒரு காரணத்தால் வீட்டைவிட்டு  வெளியேற்றப்பட்டவர்கள் அனைத்து நகரங்களிலும் வீடு வாசல் இன்றி இறுதி காலங்களில் ஆதரவற்றோராக  அனாதைகளாக சாலையில் திரிந்து மக்களிடம் கையேந்தி ஜீவனம் நடத்தி கிடைத்த இடத்தில் உண்டு உறங்கி வருகிறார்கள். அவ்வாறு சாலையோரம் சுற்றித் திரிபவர்கள் ஆதரவற்றவர்களோ, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவோ, வெளிமாநிலத்தவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உடல் நலக்குறைவாலோ  விபத்து காரணமாகவோ, குடிப்பழக்கத்தாலோ  இறந்து  அனாதை பிணங்களாக பொது இடங்களில் கிடப்பார்கள்.

இவர்கள் இறப்பானது முதுமையடைதல், ஊட்டச்சத்து குறைபாடு, நோய், தற்கொலை, பட்டினி,  மற்றும் விபத்துக்கள் உள்ளிட்டவை இறப்பிற்கு காரணங்களாகின்றன.

ஆதரவற்ற மனிதர்களின் இறப்பு  பொதுவாக சோகமான அல்லது விரும்பத்தகாத நிகழ்வாகக் கருதப்படுகிறது,  இறந்தநபரின் சமூக மற்றும் குடும்ப உறவுகளை தொடர முடியாமை போன்ற இழப்புகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. இதைத்தவிர மரணபயம், துயரம், துக்கம், மனவலி உணர்வு , மனத்தளர்ச்சி, மன அழுத்தம்,  தனிமை போன்ற இயல்பற்ற நிகழ்வுகளும் இறந்தவருக்கு ஏற்படுகின்றன. இவ்வாறு ஆதரவற்று அனாதையாக இறந்தவர்களை  பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையத்திற்கு தகவல் அளிப்பார்கள். காவலர்கள் அனாதைப் பிணங்களை மீட்டெடுத்து அவர்கள் குறித்த தகவலை விசாரிப்பார்கள். விசாரணையில், பெரும்பாலும் ஆதரவற்றவர்கள் அன்னதானம் வழங்கும் இடங்களில் உண்டு மக்கள் கூடும் பொது இடங்களில் பிச்சை எடுத்தும் ஜீவனம் நடத்தியவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெயர் விலாசம் தெரியாதவர்களாக இருப்பர்.


  சம்பந்தப்பட்ட காவல்துறையினர் விசாரணைக்கு  உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்வதற்காக கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மயானத்தில் இறுதி சடங்குகளை செய்து சொந்த நிதியில் நல்லடக்கம் செய்து வருகிறேன். மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் இயன்ற பொழுதெல்லாம் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்பார்கள் என்றார்.

Post a Comment

0 Comments