BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் மீலாது நபி மதநல்லிணக்க விழா

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் மீலாது நபி மதநல்லிணக்க விழா

 திருச்சி அரியமங்கலம் காமராசர் நகரில் இன்று காலை 11 மணி அளவில் மில்லத் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட துணைசெயலாளர் A.முகமது இக்பால் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி தலைவர் மு.ஆரிபுல்லா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட இளைஞரணி செயலாளர் A.h. மஜீத் நன்றியுரை நிகழ்த்தினார்.மாவட்ட இளைஞரணி தலைவர் சபீக், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் ஜான் பாஷா, அப்துல் லத்தீப், முகமது இர்பான், ஆகியோர் முன்னிலை வசித்தனர். 


கூட்டத்தில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் அவர்கள் சிறப்புரையாற்றினார்.திருச்சி மருத்துவக் கல்லூரி டீன் நேரு அவர்கள் வாழ்த்துரை வழங்கி ஏழைகளுக்கு இலவச சேலை வழங்கினார். கூட்டத்தில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடலூர் பக்ருதீன், மாநில இளைஞரணி தலைவர் கூனிமேடு முஸ்தபா ஆகியோர் மத நல்லிணக்க உரையாற்றினார்கள்- கூட்டத்தில் 150 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. 


அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் தயாநிதி வாழ்த்துரை வழங்கினார்.. மாநில அமைப்பு செயலாளர் முகமது அலி கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments