// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு

நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு

திருச்சி அல்லிதுறை ஊராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.எஸ் காலணியை சேர்ந்த பொது மக்கள், சமூக நீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர், அந்த மனுவில்....


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட ஆர் எஸ் எஸ் காலனியில் 60 க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு ஶ்ரீரங்கம் வட்டாச்சியரால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 


அது முதல் அங்கு வீடு கட்டி, வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்தி உரிய மின் இணைப்பு பெற்று வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீட்டு மனைகளுக்கு நிரந்தர பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


எனவே மேற்படி இடத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

Post a Comment

0 Comments