NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** பரந்தூர் விமான நிலையம் ஒப்பந்த புள்ளி வெளியிட்டது தமிழக அரசு..!!

பரந்தூர் விமான நிலையம் ஒப்பந்த புள்ளி வெளியிட்டது தமிழக அரசு..!!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் பசுமை வழி விமான நிலையமாக அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது

இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. அதிக அளவில் விவசாய நிலம் கொண்ட பகுதி என்பதால் 13 கிராம மக்களும் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இந்த நிலையில் பருந்துர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை வரவேற்று டிக்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பாக ஒப்பந்தப்புள்ளி கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான இந்த ஒப்பந்த புள்ளி சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை தமிழக அரசு வரவேற்றுள்ளது.


பரந்தூர் விமான நிலையங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆலோசனை நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஒப்பந்த பள்ளிக்கான விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 6ஆம் தேதி அன்று திறக்கப்படும் என டிக்கோ அறிவித்துள்ளது. இதன் மூலம் பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியாகியுள்ளது.

.

Post a Comment

0 Comments