// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் அகமது நவவி, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துறை முருகன், ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாவட்ட பொருளாளர் மவுலானா அமீன் யூசுஃபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 




மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் ஜமால் முகமது, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments