BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** பாபர் மசூதி இடிக்கபட்டதை கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கபட்டதை கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாமல் ஒருதலை பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும் திருச்சி மாவட்ட  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மரக்கடை பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


கிழக்கு மாவட்ட தலைவர் முகமது  ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைமை பிரதிநிதி கோவை சாதிக் அலி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு  கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மேற்கு மாவட்ட தலைவரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தொடர்ந்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில்...


பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு சகோதர சமயத்தை சார்ந்தவன் நிலையை தாண்டி இந்த நாட்டில் மனித நேயமும் மானிடமும் தலைக்க வேண்டுமானால் வகுப்பு வாத சக்திகளை மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருபவன் நான். ஆனால் இன்றைக்கு மிகப் பேராபத்து சூழ்ந்திருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தையே இன்று செல்லாதது ஆக்க கூடிய அளவிற்கு அவர்கள் சிந்திக்கிறார்கள். 




இந்தியாவில் இருப்பவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ் என்கிற அபாயத்தின் தலைவன் மோகன் பகவத் வெளிப்படையாகவே பேசுகிறார். இன்றைக்கு ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களும் ஊறுகாய் பானைக்குள் போடப்பட்டு இருக்கின்ற நிலையில் ஒரு மதசார்பற்ற மன்னன் சமய சகிப்பு தன்மையும், சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது என்பது ஒரு சவாலான காரியம் ஆகும். இந்த காரியத்தில் நாங்கள் இறங்கி இருக்கிறோம், நாதியற்று போய்விடவில்லை இஸ்லாமியர்கள். இஸ்லாத்தை அலட்சியப்படுத்திவிட்டு இந்தியாவை சிந்திக்கவே முடியாது என்கிற உண்மையை நாள்தோறும் இந்த நாட்டில் சொல்லக்கூடிய அளவிற்கு நெருக்கடிக்ககுள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  ஆகவே பாசிசத்தை வீழ்த்துகிற, அரச பயங்கரவாதத்தை வீழ்த்துகிற, மத பயங்கரவாதத்தை  வீழ்த்துகிற போரில் இஸ்லாமியர்கள்  அவர்களுடைய இலக்கை எட்டுகிறவரை  அவர்களோடு இணைந்திருக்கும் பணியை நான் தொடர்ந்து செய்வேன். பாசிசத்தை வீழ்த்துகிற போரில் 2024 பொதுத்தேர்தலில் மதசார்பற்ற அணி தேசம் தழுவிய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments