// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** கிங் ஐசிஏவின் 11-வது பட்டமளிப்பு விழா - Dr. பக்ருதீனுக்கு சமூக சேவைக்கான விருது

கிங் ஐசிஏவின் 11-வது பட்டமளிப்பு விழா - Dr. பக்ருதீனுக்கு சமூக சேவைக்கான விருது

கிங் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் அக்குபஞ்சர் மற்றும் ஹெல்த் எஜுகேஷன் டிரஸ்ட் சார்பில் 11வது பட்டமளிப்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கிங் ஐசிகாவின் 11-வது பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் மும்தாஜ் பேகம் கலந்துகொண்டு அக்குபஞ்சர் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டயங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து அக்குபஞ்சர் துறையில் சிறந்த சமூக சேவை பணி ஆற்றிய SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் Dr.பக்ருதீனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்த பட்டமளிப்பு விழாவில் திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் மணிவண்ணன்,





திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தமிழ்நாடு அக்குபஞ்சர் தலைவர் Dr.சபீர் அப்துல்லா, அகில இந்திய சித்த மருத்துவ அசோசியேஷன் தலைவர் Dr.சுப்பையா பாண்டியன், பாரதிதாசன் பல்கலைக்கழக  பேராசிரியர் மணிமேகலை,ICA செயலாளர் ராஜா முஹம்மது, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments