BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டுதல் முகாம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டுதல் முகாம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பின் வழிகாட்டி மையம் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வழிகாட்டுதல் முகாம் பீமநகர் கீழ கொசத் தெருவில் நடைபெற்றது.


மகளிர் அணி மாவட்ட தலைவர் முனைவர்.பைரோஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட பொருளாளர் ஆரிபா, பீமநகர் கிளை தலைவர் ஜெயராணி,செயலாளர் சாஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா செய்திருந்தார்கள்



இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் பாரூக்,மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான்,மாவட்டச் செயலாளர் சையது ஹக்கீம்,துணைத் தலைவர்கள் உமர் பாரூக் ஹஜ்ரத்,அலாவுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன் அப்துல் காதர்,பொருளாளர் சேக் முகமது கௌஸ்,துணைச் செயலாளர் நியாஸ் அஹமத், ஊடக அணி அமைப்பாளர் சம்சுதீன், பீமநகர் கிளைத் தலைவர் அமீர்தீன், செயலாளர் சர்புதீன், காஜா நகர் கிளைத் தலைவர் பைசூர் ரஹ்மான், உறையூர் கிளைத் தலைவர் அப்துல் முத்தலிப், மஹபூப் பாஷா, மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஷாநவாஸ், முஹம்மது பஹிம்,அல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டுதல் முகாமில் ஆண்கள் பெண்கள் என திரளானோர் பங்கேற்று பதிவு செய்து பயனடைந்தனர்.

Post a Comment

0 Comments