NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

திருச்சியில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடிகர் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு.. 

வரும் பொங்கல் பண்டிக்கைக்கு நடிகர் அஜித் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வரவுள்ளது. 


இந்நிலையில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலையதளங்களில் கடுமையாக மோதிக்குகொண்டு வருகிறார்கள். 


வாரிசு திரைப்படத்தில் ட்ரைலரில் கிரவுண்ட் மொத்தம் உன் ஆட்கள் இருக்கலாம் ஆனால் ஆடியன்ஸ் அனைவரும் ஒருவரை தான் பார்ப்பார்கள் கேள்விப்பட்டிருக்கியா? ஆட்டநாயகன் என நடிகர் விஜய் கூறும் வசனம் இடம் பெற்றுள்ளது.


இந்நிலையில் திருச்சியில் நடிகர் அஜித்  ரசிகர்கள் ( எந்த ஆட்டநாயகனும் எங்கிட்ட ஆட்ட(ம்) முடியாது , என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


இந்த போஸ்டரால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments