BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும்

 திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும் திருச்சி ஆட்சியர் பிரதீப் குமாரிடம் பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் கோரிக்கை 

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.


அந்த மனுவில், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் சென்னை செல்லும் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் சர்வே எண் 19 / 1Aல் நடத்தப்பட்டு வந்த டாஸ்மாக் கடை எண் 10213 ஆனது நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தவிட்டதன் பேரில் அந்த கடை மூடப்பட்டது.


திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் தஞ்சாவூர் வழி பஸ் ஸ்டாப் இருக்கிறது. மேலும் அந்த பகுதி தஞ்சாவூர் மற்றும் சென்னை பைபாஸ் செல்லும் ஒருவழிப்பாதையாகும். இந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வருபவர்கள் ஒருவழிப்பாதையில்தான் திரும்பி வர வேண்டும்.


ஏற்கெனவே இந்த பகுதியில் நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஜி- கார்னர் அருகே சப்-வே அமைக்க வேண்டுமென கோரிக்கை அளித்து அதன்பேரில் தங்கள் பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் நிபுணர் குழுவின் தலைமையில் சப்-வே அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.


இந்த ஒருவழிப்பாதையில் டாஸ்மாக் கடை திறந்துள்ளதால், மது அருந்திவிட்டு வருபவர்கள் இந்த ஒருவழிப்பாதையிலேயே திரும்பி வர வேண்டும். இதனால் மேற்படி மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி வருபவர்களால் விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.


அது மட்டுமல்லாமல் அந்த கடைக்கும் டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் ஸ்டாப்பிற்கும் 200 மீட்டர் அளவே தூரம் உள்ளது. அந்த பஸ் ஸ்டாப்பில்தான் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி மற்றும் பெரியார்  கல்லூரி மாணவர்கள் கூடும் இடம் மற்றும் பஸ் ஏறுமிடமாக உள்ளது.


மேலும் அந்த கடைக்கு பக்கத்தில் பக்தர்கள் வழிபடும் சங்கிலியாண்டவர் முத்து மாரியம்மன் கோவில் ஐயப்ப சேவா சங்கம் இருக்கிறது.


இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் தஞ்சாவூர் பஸ் ஸ்டாப் அருகாமையில் சர்வீஸ் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண் 10562) கடந்த வருடம் திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு பொதுமக்களின் சார்பில் பாபு என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் இந்த திறப்பதற்கு இடைக்கால தடை விதித்தும் மேலும் பொதுமக்கள் சார்பில் கடை திறப்பதற்கு எதிரான மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.


அதனால்  உயர்நீதி உத்தரவினை அடுத்து மதுபானக்கடை கடந்த 18.10.2022 அன்று மூடப்பட்டது. அதன்பிறகு திடீரென்று மீண்டும் 31.12.2022 அன்று மேற்படி டாஸ்மாக் கடை எண் 10562-ஐ அதே முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை.


ஆகவே பொது மக்கள், கல்லூரி மாணவர்கள், பயணிகள், வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் டடி.வி.எஸ். டோல்கேட், தஞ்சாவூர் வழி பஸ் நிறுத்தத்திற்கு அருகாமையில் ஒருவழி சாலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடை எண் 10562-ஐ முற்றிலுமாக அகற்றி விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் வழக்கறிஞர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments