// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி 45 ஆவது வார்டு காருண்யா நகரில் அடிப்படை வசதிகள் வேண்டி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு வசதி இல்லாமல் உள்ளது .


எனவே இந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க வலியுறுத்தியும் மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கருணையா நகரில் அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும். இன்று வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments