BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகும் வழிபாட்டு தலங்கள் - SDPI கட்சி கடும் கண்டனம்

திருச்சியில் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகும் வழிபாட்டு தலங்கள் - SDPI கட்சி கடும் கண்டனம்

திருச்சி மாவட்டம், தமிழகத்தின் மையப் பகுதியும் அமைதி பூங்காவாகவும் நிலவிவரும் மாவட்டமாகும்.

இந்த மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டு தலங்கள் தொடர்ச்சியாக இடிக்கப்பட்டும், அந்த தடங்களும் அளிக்கப்பட்டு வருகிறது.


சிறுபான்மைச் சமூகத்தினுடைய இடங்களை அபகரிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய அடையாள சின்னங்களை அழிக்க வேண்டும் என்றும் சில தீய சக்திகள், சமூக விரோதிகள் தொடர்ச்சியாக சதி வலைகளை பின்னி திருச்சி மாவட்டத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கக் கூடிய நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.


கடந்த ஜனவரி 1 திருச்சி தென்னூர் பல நூற்றாண்டுகள் பழமையான அனால் பார்க் தர்கா மட்டும் அடக்கஸ்தலத்தினை தரைமட்டமாக காவல்துறையின் உதவியுடன் இடித்தனர், இதனைக் கண்டித்து முடிக்கும் முன்னரே அடுத்ததாக திருவரம்பூர் பகுதி சர்க்கார் பாளையத்தில் 70 ஆண்டு காலமாக இருந்த மாதா கோயில் கெபி இடிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது  பல சந்தேகங்களை எழுப்புகின்றன. 


இந்த அநாகரிகமான அத்து மீறிய செயலை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர், கோட்டத் தலைவர்கள்   இதுபோன்ற செயல்களை தடுத்து சிறுபான்மை மக்களின்  சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்,மேலும்  திருச்சி மாவட்டத்தில்  வேறு எங்கும் இதுபோன்று  நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.


திருச்சி மாவட்டத்தின் அமைதி  தன்மைக்கு குந்தகம்  விளைவிக்க நினைக்கும் தீய சக்திகளை  இரும்பு கரம் கொண்டு  திருச்சி மாவட்ட நிர்வாகங்கள் தடுக்க வேண்டும்  என்று SDPI கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அறிக்கை வெளியீட்டுள்ளார் 



Post a Comment

0 Comments