BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** SDPI கட்சி திருச்சி மாவட்ட சமூக ஊடக அணி கலந்தாய்வு கூட்டம்

SDPI கட்சி திருச்சி மாவட்ட சமூக ஊடக அணி கலந்தாய்வு கூட்டம்

SDPI கட்சி திருச்சி மாவட்ட சமூக ஊடக அணி கலந்தாய்வு கூட்டம் திருச்சி மண்டல  சமூக ஊடக அணி பொறுப்பாளர் KSA.ரியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் பொறியாளர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் Er.N.G.சதாம் உசைன் அவர்கள் கலந்து கொண்டு சமூக ஊடகத்தை கையாள்வது பற்றியும்,கட்சியின் நிகழ்வுகளை வடிவமைப்பது பற்றியும் விரிவாக விவரித்தார்.


கூட்டத்தில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K. முபாரக் அலி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் A. நியாமத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு ஊடக அணியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை மட்டும் கலந்துரையாடல் நடத்தினர்.

மேலும்,சமூக ஊடக அணி திருச்சி மாவட்ட செயலாளர் உபைதூர் ரஹ்மான் அவர்கள் சமூக ஊடக பயிற்சி பட்டறை சம்மந்தமாக வகுப்பு எடுத்தார். 



இறுதியாக சமூக ஊடக அணி தலைவர் KSA. ரியாஸ் அவர்கள்  கைபேசியின் பாதுகாப்பு  முக்கியத்துவத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.



Post a Comment

0 Comments