BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** இந்தியா - அமெரிக்கா ஸ்பெயின் நாடுகளில் பெண்களின் நிலை குறித்த சர்வதேச மாநாடு

இந்தியா - அமெரிக்கா ஸ்பெயின் நாடுகளில் பெண்களின் நிலை குறித்த சர்வதேச மாநாடு

பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான மையம், வரலாற்றுத்துறை, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)  மற்றும் குளோபல் லா பவுண்டேஷன் இணைந்து நடத்திய ஒரு நாள் சர்வதேச மாநாடு 13 பிப்ரவரி 2023 அன்று தந்தை பெரியார் கலையரங்கம், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. துவக்க விழாவில் பரத நாட்டியக்கலை மற்றும்  சிலம்ப கலையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் வரவேற்பு உரையை வரலாற்று துறை தலைவர் பேராசிரியர்  ஜெ. ஜெரோம் பெர்னாண்டஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் அதைத் தொடர்ந்து சர்வதேச சிறப்பு விருந்தினராக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலிருந்து கலந்துகொண்ட வெளிநாட்டவர் மற்றும் ஏனைய கருத்தாளர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து பேராசிரியர் நா. முருகேஸ்வரி அவர்கள் இக்கருத்தரங்கின் நோக்கம் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். அதாவது வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் தலைமை பொறுப்பில் பங்கேற்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. அந்த வகையில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.  மேலும் இந்தியா அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாடுகளில் பெண்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை பற்றி இம்மாநாட்டில் பேசுவதாக அவர் தெரிவித்தார். 


அதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் ம.செல்வம் அவர்கள் துவக்க விழா உரையாற்றி இம்மாநாட்டை துவங்கி வைத்தார். பெண்களின் நிலை பற்றி குறிப்பிடும் பொழுது கல்வியில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் படித்து வருவதாகவும் வேலை வாய்ப்பிலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது  குறைந்த அளவில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். கல்வியில்  ஸ்பெயினில் 53%  விழுக்காடு பெண்கள் கல்வி கற்றவர்களாகவும், அமெரிக்காவில் 90% பெண்கள் கல்வி கற்றவராகவும் இருக்கிறார்கள் அதோடு இந்தியாவில் குறிப்பிடும் போது 64 விழுக்காடு பெண்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள், வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் பெண்கள் தலைமை பொறுப்புக்களில் குறைந்த அளவே பங்கீடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தனது உரையில் குளோபல் எக்கனாமி ஜி 20 பற்றி குறிப்பிடும் போது 27 நாடுகள் இதில் இணைந்துள்ளதாகவும், சர்வதேச அளவில் 43 நாடுகள் 80% பாலின மேம்பாட்டு வளர்ச்சியில் இடம் பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் . இந்த ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை அதிகாரி இந்த ஜி20 அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் சில நாட்களுக்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற  ஐந்து நாள் தேசிய அளவிலான சமூக அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட 1000 திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பெண்கள் மேம்பாடு மற்றும் ஜி 20 இல் பெண்களின்  பங்கு  குறித்து பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் P.S. விஜயலட்சுமி அவர்கள் தலைமையுரையில், மாணவர்கள் தங்களது வருங்கால தலைமுறையை  ஆண் பெண் பேதம் இன்றி சமமாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து குளோபல் லா ஃபவுண்டேஷன் இயக்குனர் மற்றும் தலைவர் திரு எம் சரவணன் அரவிந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 


பேராசிரியர் சூசன் எம் சா ஓரியன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில்  இருந்து கலந்து கொண்ட கருத்தாளர், அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதத்தில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார். அதில் குறிப்பாக பெண்கள் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து மேலும் மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், தான் தலைமை பொறுப்பில் திறம்பட செயல்பட்டாலும் அவர்களுக்கு திமிர் பிடித்தவள் ஆகவும் கருதப்படுகிறார்கள் என்றும், எந்த விதமான தலைமை பொறுப்பில் இருந்தாலும் தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிக்க கூடியவர்களாக இருப்பவர்கள்,  பாலின பாகுபாடு என்பது வீட்டிலும் பணியிடத்திலும் தவிர்ப்பது என்றும் போதுமான  உதவி இல்லாதவர்களாகவும் தனித்துவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்நிலை மாற சக மனிதர்களை‌ அதாவது ஆண்களை இது பற்றி பாலின சமத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து டாக்டர் குமரேஸபதி இணை பேராசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

அதைத்தொடர்ந்து லாரா‌‌  அமினிரிரோ ஸ்பெயின் பல்கலைக்கழக ஆய்வாளர், மைக்ரோ வயலன்ஸ் என்ற தலைப்பில் பேசினார். தனது உரையில் கண்ணுக்கு புலப்படக்கூடிய வன்முறைகள் மற்றும் கண்ணுக்கு புலப்படாத வன்முறைகள் என்று இரண்டு தலைப்பில் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆழமாக தெளிவாக எடுத்துரைத்தார்.  அதனை தொடர்ந்து பேராசிரியர் சான்டோ ஸ்பெயின் பல்கலைக்கழக பேராசிரியர் அவர்கள், குறிப்பிடும்போது வளர்ந்த நாடுகளிலும், இந்தியா போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் போன்று பாலின பாகுபாடு இருக்கிறது, வேலை பாகுபாடு சம ஊதியமின்மை என்பது வளர்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது என்பதை தெளிவாக தனது உரையில் எடுத்துக் கூறினார். அதனை தொடர்ந்து இறுதியாக பேராசிரியர் பிரபாவதி மாற்றுத்திறனாளிகள் மைய இயக்குனர் அவர்கள் நன்றி வழங்கினார்கள். தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  வரலாற்று துறை இணை பேராசிரியர் நா. சீதாலட்சுமி அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து சிறப்பாக நடத்தினார்.

Post a Comment

0 Comments