ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மக்கள் சேவை துறை, திருச்சி சார்பாக சமூகநலச் செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக மஸ்ஹர் ஷெரிஃப் இறைமறையை ஓதினார். மக்கள் சேவைத் துறை செயலாளர் சகோ. நவாஸ் கான் அனைவரையும் வரவேற்று பேசியதுடன், நிகழ்ச்சியை குறித்து அறிமுகப்படுத்தினார். முனைவர். ஹஜ் மொய்தீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஜமாஅத் கடந்த 75 ஆண்டுகள் தேசிய அளவில் ஆற்றிவரும் சமூகநல சேவைகள் குறித்து தனது உரையில் அவர் எடுத்துரைத்தார். இக்கட்டான காலங்களில் மக்களின் துயர் துடைக்கும் பணியை ஜமாஅத் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து செய்து வருகிறது. பேரிடர் நிவாரண உதவி முதல் மருத்துவ உதவி வரை பலதரப்பட்ட உதவிகளை அமைதியாக செய்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். திருச்சியில் சமூகநலச் செயற்பாட்டாளர்கள் ஆற்றிவரும் சிறப்பான சேவைகளை பாராட்டினார். இந்நிகழ்வில் பல்வேறு தலங்களில் சேவையாற்றி வரும் 31 சமூகநலச் செயற்பாட்டாளர்கள் மற்றும் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திருச்சி இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்க இணைச் செயலாளர் ஜனாப். காஜா மைதீன் மற்றும் கங்காரு கருணை இல்லம் திரு. ராணா ராஜா, ஜனாப். ஹனீபா மற்றும் ஜனாப். அப்துல் சலாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
0 Comments