// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ஹிட்டண்பெர்க் அறிக்கை விவகாரம் - மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஹிட்டண்பெர்க் அறிக்கை விவகாரம் - மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அதானி குழுமம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் பங்குதாரர்களாக சேர்ந்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹிட்டண்பெர்க் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


இந்த அறிக்கைக்கு பின் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றின் பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் முறைகேடு செய்ததற்கு மத்திய அரசு தான் காரணம், அவர்களின் துணையோடு தான் அதானி முறைகேடு செய்துள்ளார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 



இது குறித்து மத்திய அரசு எந்த பதிலையும் கூறாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதானி முறைகேட்டிற்கு துணை போனதை கண்டித்தும், அதானி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



திருச்சி டவுன் கிளை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.



Post a Comment

0 Comments