இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த வருடம் தமிழில் இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் ஆகிய 4 படங்கள் வெளியாகியிருந்தது....
இந்த வருடம் அவரது இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆகியவை வெளியாக காத்திருக்கின்றன....
மேலும் மலையாளத்தில் பிருத்விராஜின் ஆடுஜீவிதம், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் படம் ஆகியவற்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். இதுபோக அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை நேரு விளையாட்டு மார்ச் 19 அரங்கில் ஏ. ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறாராம். படபிடிப்புகளின் போது ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த லைட்மேன்கள் குடும்பத்தினர்களுக்கு நிதிதிரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறாராம். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments